ராமநாதபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.
பரமக்குடி அடுத்த எமனேஸ்வரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழா நிறைவு பெற்றதையடுத்து வைகாசி வசந்த திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் கலந்துகொண்ட ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.