பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. கட்டுப்பாட்டு அறையை செல்போனில் தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், சென்னை சைபர் கிரைம் போலீசார், செல்போனில் பேசிய நபர் யார்? தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக இந்தியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது நாடளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.