கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் இவரும் மணிராஜ் என்பவரும் தோட்ட வேலையை முடித்துவிட்டு ஒரே இரு சக்கர வாகனத்தில் படந்தாலுமூடு பகுதியில் சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த சொகுசு கார் இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதில்,மணிராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலையில் விபத்தை ஏற்படுத்திய ஜெனலட்சுமன் என்பவரை கைது செய்த போலீசார் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.