திருப்பத்தூரில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மந்தாரகுட்டை பகுதியை சேர்ந்த சரவணன், இளந்திரையன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் காவலாளியாக உள்ளார்.
இந்நிலையில் இன்று மாந்தோப்புக்கு சென்றபோது அறுந்துகிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சவரணன் உயிரிழந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.