ஈரோடு மாவட்டம், கோட்டை பகுதியிலுள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில். வைகாசி விசாக விழாவை ஒட்டி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, ஆசார்ய ரக்ஷாபந்தன பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது.
இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து வாருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்