தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்துக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கும் சென்று சுற்றிபார்ப்பது வழக்கம்.
இந்நிலையில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு தனுஷ்கோடியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காற்றின் வேகம் குறைந்ததால் தற்போது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.