சென்னை மாநகராட்சி 5-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது தற்காலிக பணியாளர்கள், அரசு நிர்ணயித்த 753 ரூபாய் ஊதியம் வழங்கப்படாமல், 100 ரூபாய் பிடித்தம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி, இந்த
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.