நடப்பாண்டிற்கான யானைகள் கணக்கெடுக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகளை கணக்கெடுக்கும் பணிகளை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் வன பாதுகாவலர்கள் குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜிக்ஜாக் முறைப்படி நடைபெறும் இப்பணிகளில் தன்னார்வலர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதே போல, தமிழ்நாடு ,கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
அகத்தியமலையில் 37 குழுவினர் பிரிந்து சென்று யானையை கணக்கெடுத்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்று ஜிக்ஜாக் முறைப்படி இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி உள்ளிட்ட வனச்சரகங்களை 32 பீட் பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒரு பீட் பகுதிக்கு ஒரு வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 4 பேராக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த பணிகள் நேரடியாக கண்ணில் பார்ப்பது, எச்சம், கால் தடம் போன்றவற்றைக் கொண்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்புக் காவலர்கள் பங்கேற்றுள்ள இந்த பணிகளில் பெரிய யானை, சிறிய யானை, பாலினம் மற்றும் மக்னா என வகைப்படுத்தி கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. இதில் ஒரு பீட் பகுதிக்கு 6 பேர் கொண்ட குழுவினர் என 350-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.