முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தீர்மானித்துள்ள கேரள அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை வலுவிழுந்துவிட்டதாக கூறி அணையை இடிக்க ஒப்பதல் வழங்குமாறு கேரள அரசு தாக்கல் செய்ய விண்ணப்பதை மத்திய சுற்றுச் சூழல் தள்ளுபடி செய்யாமல் வல்லுனர் குழுவின் ஆய்வுக்கு அனுப்பியது உச்சநீதிமன்றம் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் சதித்திட்டத்தை மத்திய அரசு புரிந்து கொண்டும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்களையும் உள்வாங்கியும், கேரள அரசின் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மேலும், பேபி அணையை வலுப்படுத்தத் தடையாக அப்பகுதியில் உள்ள சுமார் 15 மரங்களை வெட்ட உடனடியாக அனுமதி அளிக்கும்படி கேரள அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.