பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்ததால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக 94 புள்ளி 5 அடியாக நீர் மட்டம் எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதியும், மின் உற்பத்தி தேவைகளுக்காகவும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ குளிக்கவோ கூடாது என வருவாய் துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.