தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே லாரி மீது பால் வண்டி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீத்தாரப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்செல்வம், தனியார் பால் நிறுவன ஓட்டுனரான இவர், கேடிசி நகர் பகுதியில் பால் வண்டியை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த மாரிசெல்வத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.