தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதி கன மழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்நிலையில் அருவிகளில் தண்ணீர் குறைந்தும் சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீடிப்பது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் பதிலளித்த ஆட்சியர் சூழ்நிலைக்கு ஏற்ப அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.