வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வரும் 25-ஆம் தேதி காலை புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதனைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, வரும் 25-ஆம் தேதி புயலாக உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வரும் மே 26-ஆம் தேதி வடக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
இதனையடுத்து, தென்னிந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு பெயரிடும் முறைப்படி, இந்த முறை ஓமன் நாடு பரிந்துரைத்த ரீமால் என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
அதன்படி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் மிக கனழை பெய்யக்கூடும் எனவும் ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரியில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவலளித்துள்ளது.