புனேவில் மதுபோதையில் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சிறார் நீதி வாரியம் ரத்து செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த 21-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் ஐ.டி. ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இதில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் 18 வயது பூர்த்தியாகாத சிறுவன் என்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.