பிரிட்டனில் ஜூலை 4ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
பிரிட்டனில் அரசியலமைப்பு ரீதியாக 2025 ஜனவரிக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலையில், 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் பலமுறை கூறியிருந்தார்.
இதனிடையே, பிரிட்டனில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.