திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பெய்த கனமழை காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
பல்லடம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது.
இதன் காரணமாக பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் புகுந்ததும், வெள்ள நீருடன் கழிவு நீர் கலந்து தேங்கியிருப்பதாலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் தெரிவித்தனர்.