ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையிலிருந்து அதிகளவு உபரிநீர் வெளியேறுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.
கொடிவேரி அணையைக் காண சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம், இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
இதனால் வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கொடிவேரி அணையின் நுழைவு மூடப்பட்டுள்ளது.