நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த ஏப்ரல் மாதம் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தமக்கு கொலை மிரட்டல் வருவதாக காவல்துறையில் புகார் அளித்த நிலையில், ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜெயக்குமார் மரண வழக்கில் பல்வேறு தடயங்கள் சிக்கி உள்ள நிலையில், அவர் மரணத்திற்கு காரணத்தை கண்டறிவதில் போலீசார் தொடர்ந்து திணறி வந்தனர்.
இந்த வழக்கை 10 தனிப்படையினர் விசாரித்து வரும் நிலையில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், ஜெயக்குமாரின் மர்ம மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சிபிசிஐடி போலீசார் தனது விசாரணையை தொடங்கியுள்ளது.