மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம், புர்பா மேதினிபூரில் சாலை மறியல் நடைபெற்று வரும் நிலையில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது நடத்திய தாக்குதலில் பாஜக தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அங்கு போலீசார் மற்றும் அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.