மேட்டுப்பாளையம் அருகே கண்ணார் பாளையம் ரயில்வே சுரங்க பாதையில் 4 அடிக்கும் மேல் மழைநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால், காரமடையில் இருந்து மத்தம்பாளையம் செல்லும் சாலையில், கண்ணார்பாளையத்தில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் 4 அடிக்கும் மேல் தேங்கி நிற்கிறது.
அந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் ரயில்வே சுரங்க பாதை வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.