கரூர் மாவட்டம், குளித்தலையில் புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
பரளி நான்கு ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் சோதனை செய்ததில் அவர்களிடம் 316 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ராஜேஷ் மற்றும் கண்ணனை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.