புத்தரின் போதனைகளுக்கு நம்மை மீண்டும் அர்ப்பணித்து வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க ஒன்றிணைவோம் என தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
புத்தபூர்ணிமாவின் விசேஷமான தருணத்தில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நமது தேசம் விஸ்வகுரு ஆக அதன் பெருமையை மீட்டெடுக்கும் போது பகவான் புத்தரின் அமைதி, சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் நித்திய செய்தி முன்பை விட மிகவும் பொருத்தமானது.
அவரது போதனைகளுக்கு நம்மை மீண்டும் அர்ப்பணித்து அமைதியான, உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகத்துக்காக வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க ஒன்றிணைவோம் என ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.