கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக பிரம்மாண்ட முறையில் சீர் கொண்டு வந்த தாய்மாமனின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கிள்ளைப் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் பெண்ணின் தாய்மாமன் ஐயப்பன் என்பவர், பழம், பூ, இனிப்புகள், பட்டுச்சேலை உள்ளிட்ட 101 வகையான சீர் வரிசை தட்டுகளை கோயிலில் வைத்து பூஜித்த பின்னர் லாரியில் எடுத்து வந்தார்.
மேலும் விழாக் காணும் சிறுமியை பல்லக்கில் தூக்கி வந்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.