புதுச்சேரியில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஜக மாநில தலைவர் செல்வகணபதி ஆகியோருடன் பக்தர்களும் சேர்ந்து தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.