தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தம்மை நீதிபதி எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர், வரவேற்பறையில் இருந்த காவலரிடம் தாம் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி என்றும், மாவட்ட கண்காணிப்பாளரை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அப்போது சந்தேகமடைந்த காவலர், அவரிடம் அடையாள அட்டை கேட்டு விசாரணை நடத்தினார். அப்போது அவர் நீதிபதி இல்லை என்பது தெரியவந்தது.