பிரஜ்வல் ரேவண்ணாவின் துாதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கர்நாடாக அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுதொடர்பான கர்நாடகா அரசின் கடிதம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வீடியோ தொடர்பான வழக்கில் வெளிநாட்டில் உள்ள, எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, மத்திய அரசுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.