ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சிப்காட் தொழில்பேட்டையிலிருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரின் உப்பு தன்மையை அப்பகுதி மக்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.