கனமழை பெய்து வரும் நிலையில் உதகை அருகே குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
நீலகிரிக்கு வானிலை மையம் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளான குந்தா, கோத்தகிரி, எமரால்ட் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தது.
இதனால் பழைய அக்ரஹார குடியிருப்பில் மழை நீர் புகுந்ததுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் சிரமமடைந்து வருகின்றனர்.