கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் கலாச்சார மைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக, கிரீன்வேஸ் சாலையில் உள்ள 22.80 கிரவுண்ட் நிலத்தில், ‘கலாசார மையம்’ கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
கலாசார மையம் கட்ட தடை விதிக்க கோரி, கோயில் வழிப்பாட்டாளர் சங்க தலைவர் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டப்படி கோவில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் ஏதும் பெறப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் கலாச்சார மைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உரிய அனுமதிகளை பெறாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தமிழக அரசு உறுதியளித்ததை அடுத்து,
வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு, கலாச்சார மையம் கட்ட தடைக் கோரிய வழக்கின் விசாரணையை ஜூன் 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தார்.