தமிழகத்துல் பெய்த கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில் கனமழைக்கான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கடலூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 3 பேர், இடி, மின்னல் மற்றும் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை கூறியுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 13 கால்நடைகள் இறந்ததுடன், 40 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.