இந்தியாவிலேயே வேளாண்மைத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேளாண்மைத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 4 ஆயிரத்து 366 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு 651 கோடி ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையும், 614 கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
270 கோடி ரூபாய் மதிப்பில் விவசாய இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 56 கோடி ரூபாய் 100 சதவீதம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
137 கோடி ரூபாய் மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டமும், பயறு பெருக்க திட்டம் 139 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டதாவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக வேளாண்மைத்துறையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.