கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த 90 டன் பருப்புகள் தரமற்ற முறையில் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 416 ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக தனியாரிடம் இருந்து பருப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன.
அரசு அதிகாரிகள் சோதனை செய்தபோது, பருப்புகள் தரமற்ற முறையில் இருந்ததால் 90 டன் பருப்பு மூட்டைகளை திருப்பி அனுப்பினர்.
கடந்த 2 மாதங்களாக முறையாக பருப்பு விநியோகம் செய்யப்படாத நிலையில், தற்போது கொள்முதல் செய்யப்பட்ட பருப்புகளும் திருப்பி அனுப்பப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.