முல்லைப்பெரியாறு அணையை தகர்த்து, புதிய அணை கட்டி தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கேரளாவின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப்பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்டும் கேரளாவின் அறிவிப்பை மெத்தனப் போக்கில் எதிர்கொண்டதால், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலே சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முலைப் பெரியாறு அணையை தகர்க்க முயற்சிக்கும் கேரள அரசால் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கேரள அரசின் புதிய அணைகட்டும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தி மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.