ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
எம்.கரிசல்குளம் கிராமத்தில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாடு பெரிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.
அப்போது காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றதை சாலையின் இருபுறமும் ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். அப்போது பாதுகாப்புக்கு வந்த எஸ்ஐ-க்கு சொந்தமான பைக், மாட்டு வண்டி மோதி சேதமடைந்தது.