நெல்லை மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.