கரூரில் தாழ்வான பகுதிகளில் புகுந்த மழை நீரை அகற்ற முன்வராத அரசு அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் அருகே உள்ள மருத்துவ நகர் பகுதியில் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கனமழையால் இங்கு தாழ்வான வீடுகளில் மழைநீர் புகுந்து மூன்று நாட்களாக வெளியேறாததால் மக்கள் அவதி அடைந்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, கரூர் – ஈரோடு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டதோடு ஜேசிபி எந்திரம் மூலம் தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்றது.