நான் உயிருடன் இருக்கும் வரை தலித்துகள், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பிவானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, மேற்கு வங்கத்தில் ஒரே இரவில் முஸ்லிம்களுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் ஊடுருவல்காரர்களுக்கு ஓபிசி சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு நாட்டை விட வாக்கு வங்கி தான் முக்கியம் என்றும், வாக்கு வங்கிக்காக நாட்டை துண்டாட நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மோடி உயிருடன் இருக்கும் வரை தலித்துகள் அல்லது பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என உறுதியளிப்பதாகவும், இது மோடியின் உத்தரவாதம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.