கட்சி அலுவலகத்தின் புனித தன்மையை பாகிஸ்தான் அரசு மீறிவிட்டதாக இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ-இன்ஷாப் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் இஸ்லாமாபாத் தலைமை அலுவலகத்தை ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், தலைநகர் மேம்பாட்டு ஆணையம் இடித்து தள்ளியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெஹ்ரிக் இ-இன்ஷாப் கட்சி நிர்வாகி அலிகான், கட்சி அலுவலகத்தை இடிக்க மேம்பாட்டு ஆணையத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை என்றும், முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.