வேங்கை வயல் விவகாரத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவிடம் சிபிசிஐடி போலீஸார் ஏழரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
வேங்கை வயல் விவகாரத்தில் அதே ஊரைச் சேர்ந்த ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவிருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, அவர் புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.
அவருடன் மூன்று வழக்கறிஞர்கள் வந்த நிலையில், அவர்களை
சிபிசிஐடி காவல்துறையினர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார், காலை 11 மணியிலிருந்து இரவு 7 மணி வரை விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக சம்பவ தினத்தன்று, முரளி ராஜா தன்னுடைய வாட்ஸ்ஆப்பில் பலருக்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அனுப்பியுள்ளது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் இருவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.