கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கள்ளக்குறிச்சி மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.
கோவாவில் தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்ற நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இதில், கள்ளக்குறிச்சி மாணவர்கள் 9 பேர் முதல் இடத்தையும், 5 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், 6 மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களுடன் கள்ளக்குறிச்சி திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.