கொடைக்கானல் மலர் கண்காட்சியில் சிறந்த தோட்டம் மற்றும் கண்காட்சி அரங்கு அமைத்தவர்களுக்கு தோட்டக்கலைத்துறை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா மற்றும் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி துவங்கி நடைபெற்று வருகிறது.
பூங்காவில் பல ஆயிரம் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு கோடி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
கண்காட்சியில் தனியார் தோட்டங்களையும், அரசு தோட்டங்களையும் சிறந்த முறையில் பராமரித்து வந்தவர்கள், வித்தியாசமாக பூக்களை கொண்டு வந்து காட்சிப்படுத்தியவர்கள் என பலருக்கு தோட்டகலைத்துறை சார்பாக பரிசுகள் மற்றும் சான்றிதகள் வழங்கப்பட்டன.