தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளன.
பெரம்பலூர், அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டையில், 2 வது கட்டமாக மருத்துவக்கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் இந்த மருத்துவ கல்லூரிகளுக்காக 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.