புதுச்சேரி காவல்துறை சார்பில் SAY NO TO DRUGS என்ற கருப்பொருளை மையமாக கொண்டு விழிப்புணர்வு கேரம் போட்டி நடைபெற்றது.
புதுவையில் போதைப்பொருள் நடமாட்டமும் அதனால் ஏற்படும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
எனவே போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில், பள்ளி படிப்பை தொடராமல் மற்றும் முதல் முறை குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மூலம் விழிப்புணர்வு கேரம் போட்டி நடைபெற்றது.
இதில் 60-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு கேரம் விளையாடினர்.