சென்னை வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருக்கு குணா திரைப்பட பாடலை எடிட் செய்து அணி நிர்வாகம் வரவேற்பு அளித்துள்ளது.
டி20 இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் போட்டி, இன்று சென்னையில் நடைபெறும் நிலையில், அதற்காக ராஜஸ்தான் ராயல் அணி சென்னை வந்தது.
இந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கேரளவை சேர்ந்தவர் என்பதால், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடலை எடிட் செய்து அணி நிர்வாகம் வரவேற்பு அளித்தது.
இந்த வீடியோவை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நெட்டிசன்கள் டேக் செய்துள்ளனர்.