பிரிட்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பெண்ணை குதிரை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் குதிரைப் படை அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது அங்கு நின்ற குதிரையுடன் புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணி சென்றபோது, திடீரென அந்தக் குதிரை அந்தப் பெண்ணை முகத்தால் ‘பஞ்ச்’ விட்டது.
இதில் அந்தப் பெண் நிலைகுலைந்து சரிந்தார். உடனடியாக அவரது உறவினர், அந்தப் பெண்ணை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.