கர்நாடகாவில் மின் தடை காரணமாக அரசு மருத்துவமனையில் கைப்பேசி வெளிச்சத்தில் மருத்துவர் சிகிச்சை அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொலகல்முரு பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மருத்துவமனையில் மின் விநியோகம் தடைபட்டதால், கைப்பேசி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.