“மக்களவைத்தேர்தலில் பாஜக தனித்து 350 இடங்களையும் கூட்டணி கட்சிகள் 50 தொகுதிகளில் வெற்றி பெற்று மொத்தமாக 400 இடங்களுக்கு மேல் வெல்லும்” என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் சிலைக்கு புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுகின்ற முயற்சியில் ஈடுபடும் கேரள அரசு விவகாரத்தில், தமிழக அரசு மெத்தனமாக இல்லாமல், அதை தடுப்பதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறைந்தது 15 தொகுதிகளில் வெல்லும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.