“கோவை சரவணம்பட்டியில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக குழந்தைகள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்” என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கோவை சரவணம்பட்டி – துடியலூர் சாலையில், ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில், வசித்து வரும் பிரசாந்த் என்பவரின் மூத்த மகன் ஜியான்ஸ், மகள் பிரியா ஆகியோர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இதனிடையே, குழந்தைகள் உடல் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, அவர்களது சொந்த ஊரான ஆந்திராவிற்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் சுந்தரம் மற்றும் பாலாஜி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது பேசிய அவர்கள், “குடியிருப்போர் நல சங்கத்தினரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.