இண்டியா கூட்டணியால் பஞ்சாப் அதிகம் பாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், இண்டியா கூட்டணியின் உண்மை முகம் பஞ்சாப் மக்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்.
பிரிவினை, அரசியல் நிலையற்றத் தன்மை, தீவிரவாதம் என பல்வேறு முனைகளில் பஞ்சாப் தாக்கப்பட்டதாகவும், பஞ்சாபிலிருந்துதான் பிரிவினைக்கு காங்கிரஸ் தூபம் போட்டதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான இன படுகொலையை 1984-இல் காங்கிரஸ் நடத்தியதாக கூறிய அவர், இதுதொடர்பான கோப்புகளை தான் பிரதமராக வந்த பின்னர்தான் திறந்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்ததாகவும் குறிப்பிட்டார்.
பஞ்சாப் அரசை டெல்லியிலிருந்து ஒருவர் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குவதாக அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி, ஜூன் 1-ஆம் தேதிக்குப் பின் ஊழல்வாதிகள் சிறைக்குச் சென்றுவிடுவர் என்றும் தெரிவித்தார்.