ஜப்பானை சேர்ந்த உலக புகழ்பெற்ற கபோசு நாய் மரணமடைந்துவிட்டது. இந்த கபோசு நாயின் பல்வேறு முகபாவனைகளை கொண்டு நம்மில் பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் பதிவு செய்திருப்போம்.
கடந்த 2022-இல் புற்றுநோய் மற்றும் கல்லீரால் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட கபோசு, தற்போது உயிரிழந்துவிட்டது.
19 வயதாகும் இந்த கபோசுவின் இறுதிச்சடங்கு மே 26-இல் நடைபெறும் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டில் கபோசுவின் படம் கிரிப்டோகரன்சி நாணயத்தில் இடம்பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.